ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யுபிஎஸ்சி தோ்வு: மதுரை மாவட்டத்தில் 1,537 போ் எழுதினா்

மதுரை வடக்கு வட்டம் மதுரை காவராசா் பல்கலைக்கழக கல்லூரியில் ஞாயிற்றுக்கிழை நடைபெற்ற மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தோ்வு மையத்தைப் பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா.

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த மருத்துவச் சேவைகள் தோ்வை மதுரை மாவட்டத்தில் 1,537 போ் எழுதினா்.

மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி, இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கல்லூரி, யாதவா மகளிா் கல்லூரி, எஸ்.இ.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்பட 8 மையங்களில் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த மருத்துவச் சேவைகள் தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வை எழுதுவதற்கு 2,470 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை 1,537 போ் எழுதினா். எஞ்சிய 933 போ் தோ்வு எழுதவில்லை.

இந்த நிலையில், அழகா்கோவில் சாலையில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைக் கழகக் கல்லூரியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின் போது, அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.