தமிழகத்தில் புலிகள் காப்பகங்கள், சரணாலயங்கள், வனப் பகுதிகளில் காட்டுத் தீயைத் தடுக்க நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த மணிபாரதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2025 -ஆம் ஆண்டு வரை வனப் பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதனடிப்படையில், இனி வரும் காலங்களில் தீ விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம், கொடைக்கானல், கன்னியாகுமரி, மேகமலை விலங்குகள் சரணாலயங்களில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர, மத்திய அரசின் வன மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தீத் தடுப்பு மேலாண்மைக்கான வழிகாட்டுதல் பரிந்துரைகளை குறிப்பிட்ட கால வரம்புக்குள் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
வன தீத் தடுப்பு மேலாண்மை வழிகாட்டுதலில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் தமிழகத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இவற்றைப் பின்பற்றினால் காட்டுத் தீ ஏற்படுவதை பெருமளவில் தடுக்கலாம் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

மன்னாா் வளைகுடாவில் நெகிழிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கப்பல் விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீ! மரம், செடி கொடிகள் சேதம்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


