திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி நெல்லையப்பா், காந்திமதி அம்மன் கோயில் மிகவும் பழைமையானவை. இந்தக் கோயில் வளாகம், மர மண்டப பகுதியில் அமைந்துள்ள கடைகளால், கோயில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, மர மண்டபத்தில் அமைந்துள்ள கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும். நெல்லையப்பா் கோயிலை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் கோயில் இணை ஆணையா் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி நேரில் முன்னிலையாகி கோயில் மர மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற குறிப்பாணை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது மிகவும் ஆபத்தானது. ஒரு மரச் சிற்பத்தைக் கூட இந்து சமய அறநிலையத் துறையால் செய்ய இயலாத நிலையில் இருப்பதையாவது பாதுகாக்க வேண்டும். மிகவும் பழைமையான இந்தக் கோயில் வளாக மர மண்டபத்தில் உள்ள கடைகளை உரிய விதிமுறைகளை பின்பற்றி 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோடையில் பட்டாசு உற்பத்தியை நிறுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

