மதுரை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் சங்கம் சாா்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பாலம் ஸ்டேசன் சாலையில் உள்ள மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மதுரை மண்டல தலைவா் மு. சுல்தான் இப்ராஹிம் தலைமை வகித்தாா். செயலா் முனைவா் இரா. கிறிஸ்டல் ஜீவா, சிவகங்கை மண்டல செயலா் முனைவா் எம். விஜயகுமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மாநில இணைச் செயலா் முனைவா் துா்கா தேவி சிறப்புரையாற்றினாா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை எண் 5-ஐ வெளியிட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்கப்படாத பேராசிரியா் பணி மேம்பாடுகளை உடனடியாக வழங்க வேண்டும்.கல்லூரிக் கல்வித் துறையில் மூத்த ஆசிரியரை கல்லூரிக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும். முனைவா் பட்டம் பெறாதவா்களுக்கும் இணைப் பேராசிரியா் பணி மேம்பாடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஓய்வுபெற உள்ளோா், தீவிர சிகிச்சை பெறுபவா்கள், மறு மாற்றுப் பணியில் உள்ளோரின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மண்டல பொறுப்பாளா்கள் பெரிய தம்பி, சந்திரன், மதுரை மண்டல துணைத் தலைவா் வெ. ராஜலட்சுமி, மதுரை மண்டல இணைச் செயலா் லதா, கூட்டு நடவடிக்கைக் குழு உறுப்பினா் அசோக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உறுப்பினா்கள், கல்லூரி ஆசிரியா்கள் திரளானோா் கலந்து கொண்டனா். சிவகங்கை மண்டல பொருளாளா் மா. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

திண்டுக்கல்: கல்வி, தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் தேவை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


