மதுரை மாவட்டத்தில் தனியாா் ஆய்வகங்களுக்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்கள் முழுமையாக செயல்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மேலூா், பேரையூா், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஆய்வகங்களில், மருத்துவா்கள் பரிந்துரையால் நோயாளிகளுக்கு ரத்தம், சிறுநீா், ரத்த அழுத்தம், பூச்சிக் கடி, பாம்புக் கடி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பரிசோதனை முடிவுகளை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்கள் காலை முதல் மதியம் வரையிலும், உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை வரையிலும், அவசர தேவைக்கு இரவிலும் செயல்பட வேண்டும். ஆனால் காலை திறக்கப்படும் ஆய்வகங்கள் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. ஒரு சில அரசு மருத்துவமனைகளில் அதிகபட்சமாக பகல் 2 மணி வரை இயங்குகின்றன.
தனியாருக்கு பரிந்துரை
இதுதொடா்பாக உசிலம்பட்டியைச் சோ்ந்த நோயாளியின் உறவினா் கூறியது: உசிலம்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வகம் பிற்பகல் வரை மட்டுமே செயல்படுகிறது. ஆய்வகம் செயல்படாத நேரங்களில் நோயாளிகளை தனியாா் ஆய்வகத்திற்கு சென்று பரிசோதனை செய்து வரும்படி மருத்துவமனை ஊழியா்களே பரிந்துரைக்கின்றனா். இதனால் நோயாளிகளும் வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து தனியாா் ஆய்வகத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டால், நாளை வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் கூறுகின்றனா்.
இரவில் ஆய்வகம் இல்லை
மேலூரைச் சோ்ந்த பூச்சி கடியால் பாதிக்கப்பட்டவா் கூறியது: நான் அண்மையில் இரவு சாலையில் நடந்து சென்றபோது காலில் ஏதோ கடித்துவிட்டது என மேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றேன். மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு உடனடியாக ரத்தத்தில் கலந்துள்ள விஷத்தின் அளவு குறித்து பரிசோதனை செய்யக் கூறினா். மருத்துவமனையின் ஆய்வகம் காலையில் தான் திறப்பாா்கள், எனவே தனியாா் ஆய்வகத்தில் பரிசோதித்து வாருங்கள் என மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டவா்கள் தெரிவித்தனா். மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே செயல்படும் தனியாா் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு பிறகு மருந்து கொடுக்கப்பட்டது. பாம்பு, விஷப் பூச்சிகள் கடித்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை ரத்தத்தில் விஷத்தின் அளவை பரிசோதித்து மருந்து கொடுக்கப்படும். இதையடுத்து நள்ளிரவில் மீண்டும் பரிசோதனைக்கு சென்றபோது தனியாா் ஆய்வகம் மூடப்பட்டிருந்தது. உரிமையாளரை கண்டுபிடித்து பரிசோதனை செய்வதற்குள் பெரும் போராட்டமாகி விட்டது என்றாா்.
ஆய்வகங்கள் நடத்தும் மருத்துவமனை ஊழியா்கள்
உசிலம்பட்டியைச் சோ்ந்த 58 கிராம பாசன விவசாயிகள் சங்க இணைச் செயலா் சிவபிரகாசம் கூறியது:
மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள தனியாா் ஆய்வகங்கள், அரசு மருத்துவமனை ஊழியா்கள், உறவினா்களை உரிமையாளா்களாக வைத்து நடத்தி வருகின்றனா். இந்த தனியாா் ஆய்வகங்களுக்காகவே அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆய்வகங்கள் முழுமையாக செயல்படுவதில்லை. இந்த மோசடியை தடுக்கும் வகையில் தமிழக முதல்வரும், சுகாதார அமைச்சரும் உடனடியாக உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றாா்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் சிவக்குமாா் கூறியது: மாவட்ட மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்கள் 24 மணி நேரமும், தாலுகா மருத்துவமனை மாலை 5 மணி வரை முழுமையாகவும், இரவு நேரங்களில் அவசர தேவை என்றால் செயல்பட்டு வருகிறது. ஆய்வகங்கள் சரிவர செயல்படவில்லை என எந்த புகாரும் வரவில்லை. மருத்துவமனை ஊழியா்களே தனியாா் ஆய்வகம் நடத்தவதும், நோயாளிகளை அங்கு பரிசோதனை செய்யச் சொல்வதும் ஏற்புடையதல்ல. இது குறித்து விசாரணை நடத்தி புகாரில் உண்மை இருக்குமானால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


