மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் பழுதால் நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என நோயாளிகள் எதிர்நோக்கி உள்ளனர்.
சென்னையைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனைத்து வகையான நோய்களுக்கு நவீன உபகரணங்களை கொண்டு சிகிச்சை பெறக்கூடிய வசதி உள்ளது. இம்மருத்துவமனையில், கால்களில் உள்ள ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நோயினால் ஏற்படும் பாதிப்பால் கால்களின் செயல்பாடு குறைந்து செயலிழக்க நேரிடும். இதனால் பாதிக்கப்பட்ட கால் சில நேரங்களில் அகற்றவும் நேரிடும். இந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்புகளும் ஏற்படக் கூடும்.
இந்த நோயை கண்டுபிடிக்க, பிரத்யேக சிடி ஸ்கேன் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு குறித்து ஸ்கேன் இயந்திரம் மூலம் அறிந்த பிறகே எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்கின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த ஸ்கேன் இயந்திரம் வார்டு 51 அறை எண் 8 இல் உள்ளது. ரத்தக் குழாய் அடைப்புக்கு ஸ்கேன் எடுக்க அரசு சார்பில் கட்டணமாக ரூ. 3 ஆயிரம் பெறப்படுகிறது. முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ளவர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். இந்நிலையில், ஸ்கேன் இயந்திரம், கடந்த ஒரு வார காலமாக பழுதாகி உள்ளது. இதனால் ஸ்கேன் எடுத்த நோயாளிகள், எடுக்க வேண்டிய நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நோயாளிகளை அலட்சியப்படுத்தும் மருத்துவர்கள்!
இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறியது: என் மைத்துனர் சுப்பிரமணியன்(35), காலில் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியவில்லை. இதற்காக தூத்துக்குடியில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்தும் சரியாக வில்லை. தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி அனுமதித்தோம். மைத்துனரின் காலில் உள்ள ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், காலில் உள்ள மூன்று விரல்களை எடுக்கவேண்டும்.
அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் ஸ்கேன் எடுக்க மருத்துவர் தெரிவித்தார். இதையடுத்து செப்டம்பர் 4-ஆம் தேதி ரூ.3 ஆயிரம் பணம் செலுத்தி ஸ்கேன் எடுத்தோம். அன்றைய தினமே ஸ்கேன் இயந்திரம் பழுதாகி விட்டது.
6 தினங்கள் கடந்தும் இதுவரை ஸ்கேன் இயந்திரம் சரி செய்யப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் சென்னையில் இருந்து ஆள்கள் சரிசெய்ய வருகிறார்கள் என்கின்றனர். இதை மருத்துவர்களிடம் தெரிவித்தால் ஸ்கேன் முடிவுகள் வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்து பணத்தைத் திரும்ப அளித்துவிட்டனர். இங்குள்ள மருத்துவர்களுக்கு நோயாளிகள் குறித்தும், அவர்களது உயிர் குறித்தும் அக்கறையில்லை. இந்த ஸ்கேன் உடனடியாக எடுக்க வேண்டுமானால் தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டும். அங்கு ரூ.6ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு வரும் பொருளாதார வசதி இல்லாத நோயாளிகளால் அதிகம் பணம் செலவழித்து எவ்வாறு ஸ்கேன் எடுக்க முடியும் என்றார்.
உணவுக்கு பணமில்லை!
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாமணி கூறியது: என் கணவர் செல்வமும்(62), நானும் கூலி வேலைப் பார்த்து வந்தோம். தற்போது, கணவருக்கு காலில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அவரை ஆகஸ்ட் 18 ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தோம். செப்டம்பர் 4 ஆம் தேதி மருத்துவர் ஆலோசனையின்பேரில் ஸ்கேன் எடுத்தோம். ஆனால் ஸ்கேன் முடிவுகள் இது வரை தரப்படவில்லை. அதுகுறித்து கேட்டால் ஸ்கேன் இயந்திரம் பழுதாகி விட்டதால் இந்த பக்கம் வரக்கூடாது என ஊழியர்கள் மிரட்டுகின்றனர். மருத்துவர்கள் ஸ்கேன் முடிவு இருந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் எனத் தட்டிக்கழிக்கின்றனர். நாள் தோறும் உணவுக்கு மட்டும் ரூ.250 செலவாகிறது. பொருளாதாரம் குறைவாக உள்ளதால், உணவுக்கு கூட செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என் கணவர் போன்று பல நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாமல் உள்ளனர். ஸ்கேன் இயந்திரத்தை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முதன்மையருக்கு அதிகாரமில்லை
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியது: ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்தது. உபகரணங்களில் பழுது ஏற்பட்டால், நிர்வாகம் சம்பந்தப்பட்ட உபகரணம் வாங்கப்பட்ட நிறுவனத்திடம் பேசி சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், தற்போது ஸ்கேன் மற்றும் உபகரணங்கள் வாங்குவது, பழுது பார்ப்பது, நிர்வகிப்பது என அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதனால் உபகரணங்கள் பழுது குறித்து மருத்துவமனை முதன்மையர் அவர்களிடம் கூற தான் முடியுமே, தவிர நடவடிக்கை எடுக்க முடியாது. இது போன்று ஒவ்வொரு உபகரணங்களுக்கும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் ரத்தக் குழாய் அடைப்பு நோயாளிகள் மட்டுமின்றி பல்வேறு மருத்துவப் பிரிவுகளை சேர்ந்த நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த முறையை மாற்றி மருத்துவ நிர்வாகத்திடம் உபகரணங்களின் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றார்.
மருத்துவமனை முதன்மையர் கே.வனிதா கூறியது: ஸ்கேன் இயந்திரம் பழுது குறித்து தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தினங்களுக்குள் இயந்திரத்தின் பழுது சரிசெய்யப்படும். அதுவரை நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

