மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் சரிவர செயல்படாததால், ஊழியர்கள் சிலர் நோயாளிகளிடமும் உடன் வரும் உறவினர்களிடமும் பணம் பெறுவது தொடர்வதாகப் புகார் எழுந்துள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கான மிக முக்கியத்துவம் மிகுந்த மருத்துவமனையாக அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனர். சுமார் 3 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறுகின்றனர்.
பல்வேறு சிறப்புச் சிகிச்சைத் துறைகளின்கீழ் தலைமை மருத்துவர்கள், மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைப் பிரிவுகளும் உள்ள நிலையில், இங்கு வரும் ஏழை, எளிய நோயாளிகளிடம் ஊழியர் பணம் பெறுவது என்ற நிலை மாறவில்லை. சக்கர நாற்காலிகளில் அழைத்துச் செல்ல, குழந்தை பிறந்ததை உறவினர்களிடம் தெரிவிக்கும்போது, நோயாளிகளுக்கு உணவு வழங்க, இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல, பிரேதப் பரிசோதனைக்கு என ஒவ்வொரு இடத்திலும் ஊழியர்கள் சிலர் நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பெறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது என புகார் தெரிவிக்கப்படுகிறது. பணம் கொடுக்காவிட்டால் உரிய சிகிச்சை கிடைக்காது என்ற அச்சத்தில் நோயாளிகளும், உடன் வரும் உறவினர்களும் அதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கொடுப்பதில்லை.
இந்நிலையில், மருத்துவமனையின் பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதால் இத்தகைய புகார்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கேமராக்கள் முழுமையாகச் செயல்படவில்லை என்பதால் மீண்டும் பழைய நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வெளிநோயாளிகளுக்கு மருத்துவ மாணவர்களே சிகிச்சை அளிப்பதாகவும், மருத்துவர்கள் பணிக்கு சரிவர வருவதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நீடித்து வருகிறது. அண்மையில் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கருணாநிதி கூறியது:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலேயே சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அவையும் சரிவர செயல்படுவதில்லை. இந்நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளிடம் பணம் பெறுவது, மருத்துவர்கள் பணிக்கு வராதது போன்ற புகார்களை எப்படி தடுக்க முடியும்.
மருத்துவமனையில் இதுபோன்ற தவறுகள் நிகழும்போது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து ஆதராத்திற்கு சிசிடிவி கேமரா பதிவுகளை கேட்கும்போது, கேமராக்கள் பழுதாகிவிட்டது, மின்சாரம் பாதிப்பு என பல்வேறு காரணங்களை மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.
ஆனால் மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு என்றால் உரிய கண் காணி ப்பு கேமரா பதிவுகளை ஆதாரமாகச் சமர்ப்பிக்கின்றனர். சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இதை தடுக்க மருத்துவமனைகளில் போதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தி ஊழியர்கள் செயல்பாடுகளையும், மருத்துவர்கள் வருகையும் கண்காணித்தால் முறைகேடுகளை தடுக்கலாம் என்றார்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் வனிதா கூறியது:
மருத்துவமனை ஊழியர்கள் பணம் வாங்குவது, மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருப்பது போன்ற புகார்கள் வரவில்லை. அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 187 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இன்னும் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!

மருந்து பயன்பாட்டுக்கான மெத்தனால்: இனி இணையவழியில் உரிமம் பெறலாம்!

மண்ணச்சநல்லூா்! சமபலத்தில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

