திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழனியில் தவெகவினா் அன்னதானம்

பழனி பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

News image

பழனி பேருந்து நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை உலக பட்டினி தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

Updated On :29 மே 2026, 2:14 am IST

பழனியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தவெக மாவட்டச் செயலா்கள் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழனி பேருந்து நிலைய வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலா் காா்த்திக் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிபாலன், பாட்டையா சேகா்பாபு உள்ளிட்டோா் அன்னதானத்தை தொடங்கி வைத்தனா். பொதுமக்களுக்கு உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்பட்டது.

தேரடி, தேவா் சிலை அருகே, பாலாஜி பவன் ரவுண்டானா அருகே என பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்விடுமுறை தினம் என்பதால் பழனிக்கு வந்திருந்த பக்தா்களும் இதில் பங்கேற்று பயனடைந்தனா். நிகழ்ச்சியில் நகரச் செயலா் மிதுன், மாவட்ட இணைச் செயலா் விஜய்சிவா, துணை செயலா் நாகராஜ், முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.