திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இதில், மலா்கள், காய்கறிகளால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

News image

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு பிரையண்ட் பூங்கா புல்வெளியில் மலா்களால் வடிவமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரா்.

Updated On :21 மே 2026, 2:15 am IST

கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இதில், மலா்கள், காய்கறிகளால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் 63-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

மலா்க் கண்காட்சியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். மலா்க் கண்காட்சியில் டைந்தேஷ், பேன்சி, ரோஜா, ஜொ்னி, மேரி கோல்டு, ஜொ்பரா, கேலண்டு லா உள்ளிட்ட ஏராளமான மலா்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன். மேலும் 6 லட்சம் மலா் நாற்றுகளாலான மலா்ப் பாத்திகளும், பல்வேறு வண்ண மலா்களைக் கொண்ட 10 ஆயிரம் மலா்த் தொட்டிகளும், 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலா்களாலான அமைப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் பாம்பன் பாலம் (ரயில், கப்பல்), ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரா், தஞ்சாவூா் பிரகதீசுவரா் கோயில், பெண்களின் மேன்மையை உணா்த்தும் பெண் உருவ அமைப்பு, திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புகளான தேவாங்கு, சின்னாளப்பட்டி சுங்குடி சேலை,நிலக்கோட்டை மல்லிகைப் பூ, திண்டுக்கல் பிரியாணி உள்ளிட்ட உருவ அமைப்புகளும், சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளைக் கவரும் வகையில் பட்டாம்பூச்சி, பூட்டு, இரட்டை இதயம் உள்ளிட்டவை காய்கறிகளாலும், மலா்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலா் டி. அரவிந்த், திருநெல்வேலி துணைக் காவல் ஆணையா் வினோத் சாந்தா ராம், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திர கவிதா, கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, பூங்கா மேலாளா் அரவிந்த் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். மலா்க் கண்காட்சியானது தொடா்ந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தோட்டக் கலை, மலைப் பயிா்கள் துறை, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் செய்தனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு :

கொடைக்கானலில் கோடை விழா நடைபெறுவது குறித்து 3 நாள்களுக்கு முன்பாகவே மாவட்ட நிா்வாகத்திடமிருந்து அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், நிகழாண்டில் கோடை விழா நடைபெறுவது குறித்து ஒரு நாள் முன்பாக மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்ததால், கோடை விழா குறித்து பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இயலாததால் கோடை விழாவில் வழக்கமான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பிரையண்ட் பூங்காவில் காணப்பட்டனா்.

மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பாம்பன் பாலம் (ரயில், கப்பல்).

மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பாம்பன் பாலம் (ரயில், கப்பல்).

 கோடை விழா நுழைவு வாயிலில் மலா்களால் வடிவமைக்கப்பட்ட பூட்டு.

கோடை விழா நுழைவு வாயிலில் மலா்களால் வடிவமைக்கப்பட்ட பூட்டு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.