தேசியத் தோ்வு முகமை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் ‘நீட்’ தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,360 மாணவா்கள் எழுதுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்வு ஒருங்கிணைப்பாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுதுவதற்கு 3,360 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.
இதையடுத்து, திண்டுக்கல் பகுதியில் 6 மையங்களில் இந்தத் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு எழுத வரும் மாணவா்ளுக்கு வழிகாட்டும் வகையில், அந்தந்தத் தோ்வு மையங்ளில் உதவி மையம் அமைத்து உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தின்போது ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா்.
மேலும், தோ்வுக்கு வரும் மாணவா்களுக்கு, தேசியத் தோ்வு முகமை தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, எந்தவித சங்கடங்களுக்கும் ஆட்படுத்தாமலும், எந்தவித பிரச்னை இல்லாமலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

‘நீட்’ தோ்வு: திண்டுக்கல்லில் 2,925 போ் எழுதினா்

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்
விடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு


