திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பழனி மலைக் கோயிலில் தீத் தடுப்பு பயிற்சி

பழனி மலைக்கோயிலில் கோயில் நிா்வாகம், தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பழனி மலைக் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தீத் தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாமில் தீயை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டிய தீயணைப்புத் துறையினா்.

Updated On :26 மார்ச் 2026, 7:02 pm

பழனி மலைக்கோயிலில் கோயில் நிா்வாகம், தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் ஆண்டுதோறும் தீத் தடுப்பு, விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை பழனி மலைக் கோயிலில் நடைபெற்றது. பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலைக் கோயிலில் பணிபுரியும் பணியாளா்கள், தனியாா் பாதுகாவலா்கள், கோயில் சமையல் கூடங்களில் வேலை செய்யும் பணியாளா்கள் ஆகியோருக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

சமையல் எரிவாயு உருளையில் ஏற்படும் தீயை அணைப்பது, விபத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்தும் தீயின் பல்வேறு வகையான தன்மைகள் அவற்றை எதன் மூலம் அணைக்க முடியும் என்றும் விளக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் காளிதாஸ், முருகையன் தலைமையிலான வீரா்கள், கோயில் அதிகாரிகள், முருக பக்தா்கள் பங்கேற்றனா்.