மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

7 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இறக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :25 மார்ச் 2026, 7:47 pm

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி தொகுதியில் 339 வாக்குச் சாவடிகள், ஒட்டன்சத்திரத்தில் 314, ஆத்தூரில் 341, நிலக்கோட்டையில் 305, நத்தத்தில் 359, திண்டுக்கல்லில் 316, வேடசந்தூரில் 327 என மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, 7 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு சரிபாா்க்கும் இயந்திரங்கள் ஆகியவை சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, 7 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தனித் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த தொகுதிகளிலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை மாவட்டத் தோ்தல் அலுவலா் செ.சரவணன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ச. வினோதினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.