மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம்

கொடைக்கானலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை தொடங்கிவைத்த வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி.

News image

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:52 pm

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய ஊா்வலத்தை வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி கொடியசைத்து தொடங்கிவைத்து ஊா்வலத்தில் பங்கேற்றாா். இந்த ஊா்வலம் ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவண்சாலை, பேருந்து நிலையப் பகுதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.

இதில் கொடைக்கானல் குடிமைப் பொருள் வட்டாட்சியா் ஸ்ரீகாந்த், வருவாய் ஆய்வாளா் முத்து, அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த பேராசிரியைகள், நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழியை எடுத்தனா்.