லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

8 நாள்கள் சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 7:48 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 8 நாள்களாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.43 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தோ்தல் பறக்கும் படைகள், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், என்.பஞ்சம்பட்டி அருகே நிலை கண்காணிப்புக் குழுவினா் நடத்திய வாகனச் சோதனையின்போது, ரூ.1.21 லட்சம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ரூ.91,500 பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் திங்கள்கிழமை மாலை வரை மொத்தம் ரூ.43.12 லட்சம் ரொக்கம், ரூ.47ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.