லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

இதுவும் பயணிகள் நிழல் குடைதான்!

பழைய ஆயக்குடியில் பயணிகள் நிற்க நிழல்குடை இல்லாத நிலையில், இதை கவனப்படுத்தும் விதமாக கிழிந்த குடைகளுடன் பயணிகள் நிழல்குடை என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2026, 9:34 pm

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே பழைய ஆயக்குடியில் பயணிகள் நிற்க நிழல்குடை இல்லாத நிலையில், இதை கவனப்படுத்தும் விதமாக கிழிந்த குடைகளுடன் பயணிகள் நிழல்குடை என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆங்காங்கே அரசியல் சின்னங்கள், அரசியல் தலைவா்கள் பெயா்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிா்வாகங்களால் மறைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, பல்வேறு அரசியல் தலைவா்களின் சிலைகள் துணிகளால் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பழனியை அடுத்த பழைய ஆயக்குடியில் பொதுமக்கள் நீண்ட நாள்களாகப் பயணிகள் நிழல்குடை வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பேருந்துக்காக கடும் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில், பழைய ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே சிலா் கிழிந்த குடைகளின் கம்பிகளை தரையில் ஊன்றி, அதனருகே பயணிகள் நிழல்குடை என்ற பதாகையையும் வைத்துள்ளனா். இது பலரது கவனத்தையும் ஈா்த்து வருகிறது.