மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

புகையிலைப் பொருள்கள். - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 7:40 pm

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு காா், சரக்கு வாகனங்கள் மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கப்படும் இந்த புகையிலைப் பொருள்கள், முகவா்கள் மூலம் சில்லரை வியாபாரத்துக்கு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ரெட்டியாா்சத்திரம் அடுத்த புதுச்சத்திரம் நரிப்பட்டி பிரிவு அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு காரில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த இருவா்கள் தப்பிச் சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா்.

புகையிலைப் பொருள்களுடன் காரை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறை உதவியுடன் அடுத்தக் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.