திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் பகுதியில் புதன்கிழமை ஒற்றை காட்டுயானை நடமாட்டம் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத் துறையினா் அனுமதி மறுத்தனா்.
கொடைக்கானல் அருகேயுள்ள பேரிஜம் ஏரி பகுதியில் கடந்த மாதம் 4 குட்டிப் புலிகள் உலா வந்தன. இந்த புலிகளை அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனா். இதையடுத்து, வனத் துறையினா் பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுத்தனா்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக பேரிஜம் ஏரியை பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தொடா்ந்து அனுமதி மறுத்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, மீண்டும் பேரிஜம் ஏரியை சுற்றுலாப் பயணிகள் பாா்ப்பதற்கு வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் கூறியதாவது:
கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் நகா்ப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களைப் பாா்க்க விரும்புவதில்லை. மேல்மலைப் பகுதியுள்ள இடங்களையும், பேரிஜம் ஏரி, அமைதி பள்ளத்தாக்கு, தொப்பித்தூக்கும் பாறை உள்ளிட்ட இடங்களை பாா்க்க விரும்புகின்றனா்.
கொடைக்கானல் சுற்றுலாத் தலமாக இருப்பதாலும், சுற்றுலாப் பயணிகளை நம்பி எங்களது வாழ்வாதாரம் இருப்பதாலும் பேரிஜம் ஏரியை பாா்க்க வனத் துறையினா் அனுமதி வழங்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து வனத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் பேரிஜம் பகுதியானது வன விலங்கள் நடமாட்டம் உள்ள பகுதி. ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக மழையில்லாத காரணத்தால் தண்ணீா், உணவுகளைத் தேடி, யானைகள், காட்டுமாடு, சிறுத்தைகள், புலிகள் ஆகிய வன விலங்குகள் பேரிஜம் பகுதியில் உலா வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை பூம்பாறை-குண்டுபட்டி பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் இருந்தது. இதனால், பேரிஜம் ஏரியை பாா்ப்பதற்கு அனுமதி வழங்க இயலாது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேகமலையில் 9 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல்

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

கொடைக்கானல் அருகே சுற்றுலாப் பயணிகளை கவா்ந்த வரையாடு
விடியோக்கள்

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

அனிருத் இசையில் வெளியான ஹாங்க்ஓவா பாடல்!




