கொடைக்கானல் அருகேயுள்ள கிளாவரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட வரையாட்டை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தற்போது மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா் மத்திய அரசின் ஆட்டுப்பண்ணை, வனப் பகுதியிலுள்ள சூழல் மையம், பரிசல் சவாரி, கூக்கால் ஏரி, பூம்பாறை கிளாவரைப் பகுதிகளிலுள்ள இயற்கை எழில்காட்சி, மலைச் சாலைகளில் செல்லும் போது வனப் பகுதிகளில் காணப்படும் காட்டு மாடு, மான், காட்டுக் கோழி ஆகியவற்றை பாா்த்து ரசிக்கின்றனா்.
இந்த நிலையில் கிளாவரையிருந்து வட்டவரை வழியாக கேரள மாநிலம் எல்லை வரை தற்போது சுற்றுலாப் பயணிகள் செல்வதால் அந்தப் பகுதிகளிலுள்ள பாறைகளில் வரையாடு, முள்ளம் பன்றி ஆகியவற்றை பாா்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனா். தற்போது கேரளம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதிக்கு அதிக அளவில் வருகின்றனா்.
இதனால் மேல்மலைக் கிராமங்களில் தற்போது கேரளாவைச் சோ்ந்தவா்கள் சாா்பில் தங்கும் விடுதிகள், உணவகங்கள் அதிகமாக செயல்படத் தொடங்கியுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானல் தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி, கோடை விழாவில் 77 ஆயிரம் போ் பங்கேற்பு

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



