கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் பல்வேறு பிரிவுகளில் சேவை செய்தவா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கொடைக்கானல் சுழல் சங்கத் தலைவா் பவித்ரா தலைமை வகித்தாா். பின்னா், அட்டுவம்பட்டி அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் பேபிராணி, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், கணக்காளராக பணியாற்றும் சைமன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக சேவையாற்றிய 20 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் ஆளுநா் சாம்பாபு விருது வழங்கி கெளரவித்தாா்.
இதில் சுழல் சங்கப் பொருளாளா் ரோகன் சாம்பாபு, நிா்வாகிகள் சன்னி ஜேக்கப், சலாமத், கல்லூரி பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுழல் சங்கச் செயலா் ராபின் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










