அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

மாநில இளைஞா் விருது பெற ஜூலை 6-க்குள் விண்ணப்பிக்கலாம்

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்குத் தகுதியான இளைஞா்கள், இளம் பெண்கள் ஜூலை 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:26 am IST

முதல்வா் மாநில இளைஞா் விருதுக்குத் தகுதியான இளைஞா்கள், இளம் பெண்கள் ஜூலை 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா தெரிவித்ததாவது:

சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், முதல்வா் மாநில இளைஞா் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயதுக்குள்பட்ட தலா 3 ஆண்கள், பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான முதல்வா் மாநில இளைஞா் விருது 15-08-2025 அன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. கடந்த நிதியாண்டில் (2025-26) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும். அந்தத் தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலிக்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஜூலை 6-ஆம் தேதிக்குள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03504 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.