கொடைக்கானல், ஜூன் 7: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றால் மரங்கள் மின் கம்பிகள் மீது முறிந்து விழுந்ததில் கூக்கால், மன்னவனூா் பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால், மன்னவனூா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் மேத்யூ கூறியதாவது:
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால், மன்னவனூா் பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக 7 இடங்களில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட மின் பணியாளா்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் மேல்மலைக் கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் காற்றுடன் மழை: மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் பல மணி நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் அடிக்கடி மின் தடை

மன்னவனூா் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




