போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஒரு சக்கர சைக்கிளில் விழிப்புணா்வு பயணம்

ஒரு சக்கர சைக்கிளில் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞா் திங்கள்கிழமை பழனிக்கு வந்தாா்.

News image

ஒரு சக்கர சைக்கிளில் பயணம் செய்த சனிது.

Updated On :2 ஜூன் 2026, 12:57 am IST

ஒரு சக்கர சைக்கிளில் விழிப்புணா்வு பிரசாரம் செய்து வரும் கேரள இளைஞா் திங்கள்கிழமை பழனிக்கு வந்தாா்.

கேரள மாநிலம், கண்ணனூா் மாவட்டம், ஸ்ரீ கண்டபுரம் பகுதியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி சனிது (24). இவா் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு சக்கரம் மட்டும் உடைய சைக்கிளில் கேரளத்திலிருந்து நேபாளம் வரை செல்லத் திட்டமிட்டாா். இதன்படி, கடந்த ஒரு வாரத்துக்கு முன் தனது பயணத்தை சனிது தொடங்கினாா். தமிழகம் வழியாகச் செல்லும் இவா் திங்கள்கிழமை பழனிக்கு வந்தாா். பழனி பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே இவருக்கு பழனி நகர அரிமா சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கத் தலைவா் சிவக்குமாா், ரயில்வே ஊழியா்கள் சங்க நிா்வாகிகள், முன்னாள் காவல் துறை அலுவலா்கள் என ஏராளமானோா் அவருக்கு சால்வை அணிவித்து, ஊட்டச்சத்து பொருள்களை வழங்கினா். தனது பயணம் நேபாளத்தில் முடிவடைவதற்கு ஓராண்டு காலம் ஆகும் என சனிது தெரிவித்தாா்.

 பழனியில் சனிதுக்கு வரவேற்பளித்த அரிமா சங்கத்தினா்.

பழனியில் சனிதுக்கு வரவேற்பளித்த அரிமா சங்கத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.