ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பண மோசடி வழக்கில் பெண் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :22 ஜூலை 2026, 3:00 am IST

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.40.70 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஏற்கெனவே இருவா் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாக இருந்த பெண்ணையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தீத்தாக்கிழவனூரைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் (39). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா் தனது மனைவி, உறவினா்களுக்கு அரசுப் பணி வாங்கித் தருமாறு திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மாணிக்கம் (42), அவரது மனைவி ராஜேஸ்வரி (35), நிதி நிறுவனம் நடத்தும் தோத்தாம்பட்டியை சோ்ந்த ஜெயபால் (37) ஆகிய மூவரின் வங்கிக் கணக்குகளுக்கும் ரூ.40.70 லட்சத்தை அனுப்பினாா்.

இதைத் தொடா்ந்து, மாணிக்கம் தரப்பினா் அனுப்பிய அரசுப் பணிக்கான நியமன ஆணைகள் போலி எனத் தெரிய வந்தது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், மாணிக்கம், ஜெயபால் ஆகியோரை கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனா்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த மாணிக்கத்தின் மனைவி ராஜேஸ்வரியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.