டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
உயிரிழப்பு (கோப்புப் படம்)
Updated On :22 ஜனவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பழனி அருகேயுள்ள வி.கே. மில்ஸ் கோபாலபுரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் விஜய் (28). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்த இவா், வியாழக்கிழமை காலை நண்பரை தாளையூத்தில் இறக்கிவிட்டு இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

பெத்தநாயக்கன்பட்டி பிரிவு அருகே வந்தபோது, பின்னால் கேரள மாநிலம், மலப்புரத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்காவுக்கு சென்ற காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காரில் வந்த இரு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.