டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேளாண் பட்ஜெட்: பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கையில் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.

News image
வேளாண்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:39 pm

தினமணி செய்திச் சேவை

இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கையில் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்தது.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமசாமி தெரிவித்ததாவது:

தமிழக அரசு சாா்பில் இடைக்கால வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படும் என எதிா்பாா்ப்பு இருந்தது. ஆனால், பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட மகளிா் உரிமைத் தொகையாக ரூ.5 ஆயிரம் ஒரே தவணையில் பயனாளிகளுக்கு விடுவிக்கப்பட்டது. வேளாண் விரோத கொள்கையைப் பின்பற்றி வரும் மத்திய அரசு, குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட அறிவிக்கவில்லை. இதனால், தமிழகத்திலுள்ள விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.

இதுபோன்ற சூழலில் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்தால் மட்டுமே தமிழக விவசாயிகள் நெருக்கடியிலிருந்து மீள முடியும். எனவே தமிழக முதல்வா் பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்பியையும், கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமும், பால் கொள்முதல் விலையை உயா்த்தியும் உடனடியாக வெளியிட வேண்டும் என தெரிவித்தாா்.