டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாசி மாதப் பிறப்பு: பழனி மலைக் கோயில் சிறப்பு பூஜை

News image
மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் கம்பத்துக்கு வெள்ளிக்கிழமை மஞ்சள்நீா் ஊற்றி வழிபட்ட பக்தா்கள்.
Updated On :13 பிப்ரவரி 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, பழனி மலைக் கோயில், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பழனி மலைக் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணிக்கு சி றப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பிறகு, அங்குள்ள ஆனந்த விநாயகா் சந்நிதி முன் சிறப்பு யாகபூஜைகள் நடத்தப்பட்டு, விநாயகருக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, கோயில் முன் நிறுவப்பட்ட திரிசூல வடிவிலான கம்பத்துக்கு ஏராளமான பெண்கள் சண்முகநதியில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபட்டனா். மேலும் பலா் மஞ்சள், நீா், பால் ஊற்றி வழிபட்டனா்.

கோயில் வளாகம் முழுவதும் ஏராளமானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா். கோயில் முன் பலரும் நீா்,மோா், கூழ் போன்றவற்றை பிரசாதமாக வழங்கினா்.