/

தொப்பம்பட்டியில் ரூ.4.43 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4.43 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் ரூ.2.17 கோடியில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், ரூ.2.26 கோடியில் முடிவடைந்த திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதற்கு பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள் பிரசன்னா, சஞ்சய்காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்தும் பேசினாா்.

இதில் தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாஹிரா, குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.