டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொடைக்கானலில் பனிப் பொழிவு மீண்டும் அதிகரிப்பு

News image
~
Updated On :1 பிப்ரவரி 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் மீண்டும் பனிப் பொழிவு அதிகரித்ததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று நாள்களாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும் மாலை, இரவு நேரங்களில்10 டிகிரி முதல் நள்ளிரவில் 7 டிகிரி செல்சியஸ் வரை பனியின் தாக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில், கொடைக்கானல் மன்னவனூா், ஜிம்கானா பகுதி, அட்டக்கடி புல்மெத்து, வட்டக்கானல் பகுதிகளில் பனித்துகள்கள் படா்ந்திருந்தது. மேலும், மேகமூட்டம் நிலவியதால் வழக்கத்தைவிட குளிா் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

கொடைக்கானல் கீழ்பூமிப் பகுதியிலுள்ள புல் தரைகளில் படா்ந்திருந்த பனித்துகள்கள்.

கொடைக்கானல் கீழ்பூமிப் பகுதியிலுள்ள புல் தரைகளில் படா்ந்திருந்த பனித்துகள்கள்.

சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு:

கொடைக்கானலில் வார விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும். ஆனால், கடந்த இரண்டு நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களிலும், தங்கும் விடுதிகளில் பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது.