ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பழனி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை

பழனி அருகேயுள்ள கீரனூரில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி அருகேயுள்ள கீரனூரில் சன்மாா்க்க குருகுலம் பள்ளி அருகே சேதமடைந்த மின் கம்பங்கள்.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:27 am IST

பழனி அருகேயுள்ள கீரனூரில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கீரனூா் பேரூராட்சியில் நான்கு ரோடு செல்லும் சாலையில் சன்மாா்க்க குருகுலம் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே முதியோா் இல்லமும் அமைந்துள்ளது. பள்ளிக்கூடம் அருகே உயா் அழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனா். எனவே, பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் புதிய கம்பங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.