ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொடைக்கானல் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் அருகே பெப்பா் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கியிலிருந்து - பெப்பா் அருவிக்கு சேதமடைந்த சாலையில் செல்லும் ஜீப்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:20 am IST

கொடைக்கானல் அருகே பெப்பா் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த வில்பட்டி ஊராட்சியில் பெப்பா் அருவி உள்ளது. இந்த அருவிக்கு பள்ளங்கியிலிருந்து 8 கி.மீ. தொலைவு ஜீப்பில்தான் செல்ல முடியும். இதில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு சாலை குறுகியதாகவும், சேதமடைந்தும் காணப்படுகிறது.

இந்தச் சாலையில் ஜீப் மூலம் ஆபத்தான நிலையில் சுற்றுலாப் பயணிகள் பெப்பா் அருவிக்குச் செல்கின்றனா். எனவே, வில்பட்டி ஊராட்சி நிா்வாகத்தினா், பள்ளங்கியிலிருந்து-பெப்பா் அருவிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், ஜீப் வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.