ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

வத்தலகுண்டு மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை முளைப்பாரிகளை சுமந்து சென்ற பெண்கள்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

திண்டுக்கல் மாவட்டம்,   வத்தலகுண்டு தெற்குத் தெருவில் அமைந்துள்ள  மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழாவையொட்டி சக்தி கரகம் ஜோடித்து எடுத்து வரப்பட்டு அம்மன் வடிவம் கொண்ட திரிசூலத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனா். திருவிழாவின் இறுதி நிகழ்வாக முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் இளைஞா்கள் சிலம்பாட்டம், புலியாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுடன் பங்கேற்றனா். பின்னா், முளைப்பாரிகளை பெண்கள் மஞ்சளாற்றில் கரைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.