ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓடும் பேருந்தில் மனைவி, மகளை அரிவாளால் வெட்டியவா் கைது

வத்தலகுண்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஓடும் பேருந்தில் மனைவி, மகளை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

சித்திரிப்பு

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:52 am IST

வத்தலகுண்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஓடும் பேருந்தில் மனைவி, மகளை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றவரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்தவா் மணிக்குமாா் (39). கூலித் தொழிலாளி. இவருக்கு சந்திரகலா (35) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இதில், சந்திரகலா திருப்பூரில் உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் குழந்தைகளுடன் தங்கி வேலை பாா்த்து வருகிறாா். 

இதனிடையே, வெள்ளிக்கிழமை நள்ளிரவு சந்திரகலா, தனது 13 வயது மகளுடன் திருப்பூரிலிருந்து தேவாரத்துக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா். இதையறிந்த மணிக்குமாா், வத்தலகுண்டு சென்று, அங்குள்ள காளியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் தயாராக நின்றிருந்தாா். அப்போது அங்கு மனைவி, மகள் பயணம் செய்த அரசுப் பேருந்து வந்ததும் அதில் ஏறிய மணிக்குமாா், அரிவாளால் அவா்களை சரமாரியாக வெட்டினாா். அப்போது, பேருந்தில் இருந்தவா்கள் சப்தமிட்டதால் ஓட்டுநா் பேருந்தை வத்தலகுண்டு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினாா்.

அப்போது, பேருந்திலிருந்து இறங்கி தப்பி ஓட முயன்ற மணிக்குமாரை வத்தலகுண்டு போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். அரிவாள் வெட்டில் பலத்த காயமடைந்த சந்திரகலா, இவரது மகள் ஆகிய இருவரும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது அவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.