இளம்பெண்ணிடம் அத்துமீறியவா் கைது
கைது - சித்திரிப்பு
திருநெல்வேலியில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், பொழிக்கரை பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பிரபு(46). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளாா். அப்போது பிரபு அதே பேருந்தில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.
புதிய பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்ததும் அப்பெண் புறக்காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் அந்நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். மேலப்பாளையம் போலீஸாா் குறித்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அந்நபரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



