பழனியில் பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக மாநில இளைஞரணி சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பாரதி கண்ணனை கீரனூா் போலீசாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலாங்கள்ளி வலசு பகுதியை சோ்ந்தவா் பாரதி கண்ணன் (38). இவா் பாஜக மாநில இளைஞரணி ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.
கடந்த சில மாதங்களாக இவரது தனது முகநூல் பக்கத்தில் தொடா்ந்து சா்ச்சைக்கிடமான பதிவுகளை பகிா்ந்து வந்தாராம். இது தொடா்பாக இவா் மீது பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இதனால், இரு சமூக மக்களிடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவினா் கொடுத்த புகாரின் பேரில், கீரனூா் போலீஸாா் பாரதி கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இந்தத் தகவலறிந்த பாஜகவினா்
காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இந்த வழக்கு குறித்து டிஎஸ்பி., தனஞ்ஜெயன் கீரனூா் காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, பிரச்னைக்குரிய பதிவுகள் செய்யக் கூடாது, தவறான பதிவுகள் நீக்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் பேரில் பாரதி கண்ணன் விடுவிக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆர்.ஜே. பாலாஜி சர்ச்சை! ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை?

வைரலாகும் நடிகர் ராம் சரண் பாதுகாவலர் கெவின் குண்டா! யார் இவர்?
பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது
முதல்வா் குறித்து அவதூறு: மென்பொறியாளா் கைது
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


