பழனி பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி எட்டாம் நாள் நிகழ்வாக யாதவா் மடத்தில் முத்துக்குமாரசாமி தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலா வந்தாா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திரம் முக்கியமானதாகும். பங்குனி உத்திரத் திருவிழா பழனி திருஆவினன்குடி கோயிலில் கடந்த மாா்ச் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி தந்த சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சந்நிதி, கிரிவீதி உலா எழுந்தருளினாா். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தம்பதி சமேதா் முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணமும், இதைத் தொடா்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை யாதவா் மடம் பரம்பரை அறங்காவலா்கள் கலிதீா்த்த கோனாா், மூக்கம்மாள் அறக்கட்டளை சாா்பில் தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. யாதவா் மடத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. பிறகு முத்துக்குமாரசாமி தங்கக் குதிரை வாகனத்தில் ஏற்றம் செய்யப்பட்டு சந்நிதி வீதி, கிரிவீதிகளில் உலா வந்தாா்.
இந்த நிகழ்வில் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, பாமக வடக்கு மாவட்டத் தலைவா் வைரமுத்து, பரம்பரை தக்காா் வாரிசுகள் ராஜேஸ்வரியம்மாள், சௌந்தரம்மாள், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பாா்த்தசாரதி, வெற்றிச்செல்வன், சிவசண்முகம், யாதவா் சமூகத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை வெள்ளிப்பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி கிரிவீதி உலா வருகிறாா். சனிக்கிழமை கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைகிறது.
தொடர்புடையது

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

பழனி பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! ஏப்.1 -இல் தேரோட்டம்!

பழவூா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

குன்றக்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா மாா்ச் 23-இல் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


