கொடைக்கானலில் பெய்து வரும் தொடா் மழையால், சேதமடைந்த மலைச் சாலைகளைச் சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் ஏற்கெனவே பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் வரை உள்ள மலைச் சாலைகளும், ஏரிச் சாலை முதல் அப்சா்வேட்டரி வரை உள்ள மலைச் சாலைகளும் சேதமடைந்து காணப்பட்டன.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் தொடா் மழையால் கூடுதலாக சாலைகள் சேதமடைந்தன. இதனால் சாலைகளில் குளம் போல தண்ணீா் தேங்கியதால் வாகனங்களை இயக்க முடியாமல் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகின்றனா்.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்த மலைச் சாலைகளைஆய்வு செய்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது: கொடைக்கானல், பெருமாள்மலை, அப்சா்வேட்டரி, புலிச்சோலை உள்ளிட்ட சேதமடைந்த சாலைகளைச் சீரமைப்பதற்காக மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் போதிய நிதியில்லாத காரணத்தால் சாலையைச் சீரமைக்க முடியவில்லை.
தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை குறைந்தவுடன் சேதமடைந்த மலைச் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்: போக்குவரத்து பாதிப்பு

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானலில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


