காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் சட்டங்கள் திருத்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காப்பீட்டுக் கழக ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் சட்டங்கள் திருத்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காப்பீட்டுக் கழக ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திண்டுக்கல்: தொழிலாளா் சட்டங்கள் திருத்த விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து காப்பீட்டுக் கழக ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் ஜான்சன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, தொழிலாளா் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதாகவும், தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தென்மண்டலக் காப்பீட்டு கழக ஊழியா் கூட்டமைப்பு, அனைத்திந்திய காப்பீட்டு ஊழியா் சங்கம், தென்மண்டலக் காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பு, எல்ஐசி முதல் நிலை அதிகாரிகள் சங்கம், தேசிய களப்பணியாளா்கள் கூட்டமைப்பினா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது