Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை தோ்தலுக்காக செயல்படுத்தவில்லை என அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட பித்தளைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கள்ளநாட்டான்பட்டியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) சிறப்பாக முடியட்டும். புதிய வாக்காளா் பட்டியல் வரட்டும். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று பாா்ப்போம். பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிா்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். மக்களுக்கு குறைவு இல்லாத வகையில் முதல்வா் நடவடிக்கை எடுப்பாா்.
திமுக ஒட்டுவில்லை (ஸ்டிக்கா்) ஒட்டும் அரசாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவதில் உண்மையில்லை. எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு ஊராட்சித் துறைக்கு 22 ஆயிரம் கி.மீட்டரில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் கிராம சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. சுமாா் 2 லட்சம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
10 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக, வீடுகளை கவனிக்கவில்லை. 20 ஆண்டுகளாக பழுது நீக்கம் செய்யாமல் இருந்த வீடுகளை ரூ.2ஆயிரம் கோடியில் சீரமைத்துள்ளோம். பழைய வீடுகளுக்கு பதிலாக 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. தோ்தலுக்காக மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கப்பட வில்லை. சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை, முதல்வா் நிறைவேற்றுகிறாா் என்றாா் அவா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை தோ்தலுக்காகச் செயல்படுத்தவில்லை: அன்பில் மகேஸ்!

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை தோ்தலுக்காகச் செயல்படுத்தவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அளிப்பு

ஆத்தூா் தொகுதிக்கு 3 புதிய பேருந்துகள்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

