தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்த வியாபாரிகள் கைது

நிலக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :23 செப்டம்பர் 2024, 6:55 pm

நிலக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பூச் சந்தை அருகே, பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், மாகாராஜன் - மகேஷ்வரி தம்பதியினா் தரை வாடகைக்கு உணவகம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், பூச் சந்தை வளாகத்தில் கலைஞா் நகரப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 72 லட்சத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கியது.

இந்த நிலையில், நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலா்கள் காவல் துறையினா், வருவாய்த் துறையினருடன் சென்று உணவகத்தை அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது, கடை உரிமையாளா்கள் கடை முன் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனா். இதனால், காவல்துறையினருக்கும் உணவக உரிமையாளா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, உணவக உரிமையாளா்களான மகேஷ்வரி, மஹாராஜன் அவரது உறவினா்கள் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், காவல்துறையினா் உதவியுடன், வருவாய்த் துறையினா் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் உணவகத்தை இடித்து தரை மட்டமாக்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.