திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு: உயா்நீதிமன்றம்

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :28 மே 2026, 4:01 am IST

நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சோ்ந்த ராஜாராம் தாக்கல் செய்த பொதுநல மனு:

பாளையம் ஊராட்சியின் வாா்டு 8-இல் ஏற்கெனவே ஒரு நூலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், வாா்டு 11-இல் புதிய நூலகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது அவசியமற்றது. எனவே, இந்த நிதியைக் கொண்டு புதிய நூலகம் அமைப்பதற்கு பதிலாக 8-ஆவது வாா்டில் உள்ள நூலகத்தை சீரமைக்க அல்லது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒரு குறிப்பிட்ட பகுதியில் நூலகம் இயங்குகிறது என்பதற்காக அருகில் புதிய நூலகத்தை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை ஏற்க முடியாது. கல்வியை மேம்படுத்த, மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த புதிய நூலகங்களை அமைப்பது அரசின் கொள்கை முடிவு. இது, அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக இல்லாத நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.