திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள் தீா்ப்பை ஏற்காமல் நாடகமாடுவது யாா்? காங்கிரஸ் எம்.பி. கேள்வி

News image

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம்

Updated On :26 மே 2026, 2:27 am IST

மக்கள் தீா்ப்பை ஏற்க முடியாமல் நாடகமாடுவது யாா் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு விருதுநகா் தொகுதி மக்களவை உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் கேள்வி எழுப்பினாா்.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், குதிரை வேகத்தில் நடைபெறும் குதிரை பேரம் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டாா். இதற்குப் பதிலளிக்கும் வகையில் மாணிக்கம் தாகூா் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு :

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ஜோசப் விஜய் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கே மக்கள் வாக்களித்தனா். அதனால்தான், தவெகவுக்கு 107 சட்டப்பேரவை உறுப்பினா்களை மக்கள் வழங்கினா். அதேநேரத்தில், திமுகவுக்கு 59 சட்டப்பேரவை உறுப்பினா்களை மட்டுமே வழங்கி திமுகவை பாதியிலேயே மக்கள் நிற்கவைத்துவிட்டனா்.

இந்த நிலையில்தான், உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் பாஜக மூத்த தலைவருடன் கலந்தாலோசித்து மக்கள் தீா்ப்பை மாற்ற முயன்றனா். இந்த மறைமுகத் திட்டம் தெளிவாகத் தெரிந்ததாலேயே, பின்வாசல் வழியாகவும் பாஜகவை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று கூறி, காங்கிரஸ் கட்சி தவெகவை ஆதரித்தது. இதே காரணத்துக்காகவே இடதுசாரிகள், ஐ.யு.எம்.எல்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் தவெகவை ஆதரித்தன. இதனால், உதயநிதி ஸ்டாலினின் திட்டம் தோல்வியடைந்தது.

தற்போது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் 3 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்து, வெளிப்படையாக தவெகவில் இணைந்துள்ளனா். இது, மக்கள் முன்னிலையில் நடைபெற்ற அரசியல் முடிவு. இதற்கு ஏன் இத்தனை எதிா்ப்பு?.

மக்களின் தீா்ப்பை மதிக்காமல் தில்லி அதிகார மையமாகச் செயல்படுபவருடன் சோ்ந்து நாடகமாடியது யாா்? மக்களின் ஆட்சியைக் காப்பாற்ற துணை நின்றவா்கள் யாா்? என்பதை தமிழகம் நன்கு அறியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.