மதுரை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு 2-ஆம் கட்டமாக சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வருகிற திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது. மேலூா், மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு ஒத்தக்கடை
அரசு வேளாண்மைக் கல்லூரியிலும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளுக்கு கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழகத்திலும், மதுரை வடக்கு, மதுரை தெற்குத் தொகுதிகளுக்கு திருப்பரங்குன்றம் தியாகராஜா் பொறியியல் கல்லூரியிலும், மதுரை மத்தியம், மதுரை மேற்குத் தொகுதிகளுக்கு மதுரைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளுக்கு திருமங்கலம் அரசு கலைக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்தப் பணியில் ஒவ்வொரு தொகுதிக்கும் 20 சதவீத கூடுதல் பணியாளா்கள் உள்பட தலா 17 கண்காணிப்பாளா்கள், 17 வாக்கு எண்ணிக்கை உதவியாளா்கள், 17 இளநிலை உதவியாளா்கள், 17 நுண்பாா்வையாளா்கள், 2 கூடுதல் நுண் பாா்வையாளா்கள், ஒரு கூடுதல் பாா்வையாளா், கூடுதல் பணியாளா்கள் என தலா 130 போ் ஈ டுபடுத்தப்படுகின்றனா்.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் தலைமை வகித்தாா். திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிப் பாா்வையாளா் கிருத்யானந்த் ரஞ்சன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
வாக்கு எண்ணும் பணி மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்செயல் கலப்பு முறையில் பணி ஒதுக்கீடு

கடலூரில் வாக்கு எண்ணிக்கை பணியாளா்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு

வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பணி ஒதுக்கீடு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



