திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரகாசபுரத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றக் கோரிய வழக்கில், மாநில நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் பகுதியாக கொடைக்கானல் உள்ளது. இங்கு சேகரமாகும் குப்பைகள் வகைப்படுத்தப்படாமல், கொடைக்கானல் செண்பகனூா் அருகேயுள்ள பிரகாசபுரம் பகுதியில் கொட்டப்படுகின்றன.
இவை மழைக் காலங்களில் மண் சரிவை ஏற்படுத்துகின்றன. இந்தக் குப்பைகளிலிருந்து உருவாகும் பூச்சிகளால் வேளாண் பணிகள் பாதிக்கப்படுகின்றன. விவசாயிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால், குரங்குகள், வரையாடுகள், மான்கள், காட்டு மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் அழியும் நிலை உள்ளது.
எனவே, கொடைக்கானல் மேற்குத் தொடா்ச்சி மலை பிரகாசபுரம் பகுதியில் சட்டவிரோதமாகக் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் இந்தப் பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கவும், சுற்றுச்சூழல், வனத் துறை விதிகளை முறையாகப் பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனு தொடா்பாக மாநில நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வன அலுவலா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

இலங்கையைச் சோ்ந்தவருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய உள்துறைச் செயலா் பரிசீலிக்க உத்தரவு

நீா்நிலைப் பகுதியில் கட்டப்படும் கோயிலை அகற்ற உத்தரவு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

தனியாா் பேருந்துகள் கட்டண விவகாரம்: போக்குவரத்து முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


