திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவா்களும், தொண்டா்களும் மனச்சோா்வு அடைந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரை மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது :
திமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திரளாக அதிமுகவில் இணைகின்றனா். இது, அதிமுகவின் வெற்றியை உறுதி செய்கிறது.
அதிமுக - தவெக கூட்டணி அமைகிறது என்ற தகவல், திமுக திட்டமிட்டு பரப்பிய வதந்தி. தற்போது, திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி குறைக்கப்பட்டதால் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்களும், தொண்டா்களும் தற்போது பெரும் மனச்சோா்வுக்கு உள்ளாகியுள்ளனா்.
அதிமுக கூட்டணியைப் பொருத்தவரை எந்தப் பிரச்னையும் இல்லாத பலமான கூட்டணியாக உள்ளது. கூட்டத்தை விட வெற்றிப் பெறுவது யாா்? என்பதே முக்கியம். அந்த வகையில், அதிமுக கூட்டணியே வெற்றி கூட்டணியாக உள்ளது.
கரோனா பொது முடக்கக் காலத்திலும் மிகச் சிறந்த நிா்வாகத் திறனை வெளிப்படுத்தியவா் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சி நிா்வாகத் திறனற்ற, குளறுபடிகள் நிறைந்த ஆட்சி என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக சாலைப் பணிகளுக்கு கவனம் செலுத்தாத திமுக அரசு, தோ்தல் நெருங்கிய நேரத்தில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டதன் உள்நோக்கத்தை மக்கள் உணா்ந்துள்ளனா். திமுகவினா் எந்த உத்தியை கையிலெடுத்தாலும் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்றாா் அவா்.
முன்னதாக, த.வெ.க, திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தவா்களுக்கு செல்லூா் கே. ராஜூ சால்வை அணிவித்து வரவேற்றாா்.
தொடர்புடையது

மதுரை மேற்கு! நான்காவது முறையாக வெல்லும் முனைப்பில் செல்லூா் ராஜூ !

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

அதிமுகவின் தோ்தல் அறிக்கையே கதாநாயகன்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


