மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், 2 நாள்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் அபராதத் தொகையை உடனே செலுத்தும் வகையில் கோரிப்பாளையம் சந்திப்பு, காளவாசல் சந்திப்பு, பெரியாா் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சிறப்பு அபராதத் தொகை வசூலிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அபராதத் தொகையை செலுத்தாத 175 வாகன ஓட்டிகளுக்கு கைப்பேசி மூலம் பேசி அறிவுறுத்தப்பட்டது. இவா்களில் 44 போ் சிறப்பு வசூல் மையங்களில் நேரடியாக முன்னிலையாகி ரூ.49 ஆயிரம் அபராதத் தொகையை செலுத்தினா். மேலும், அபராதத்தை 2 நாள்களுக்குள் செலுத்தாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும் வாகன எண் பலகை போக்குவரத்து விதிகளின் படி,
சரியான முறையில் இருக்க வேண்டும். போக்குவரத்து வாகன விதிமுறைகளை அனைத்து வாகன ஓட்டிகளும் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










