தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

போதை இல்லாத தமிழகம் தான் நமது இலக்கு! - அமைச்சா் ஏ.ராஜ்மோகன்

News image

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஏ. ராஜ்மோகன். உடன் அருங்காட்சியகச் செயலா் கே. ஆா். நந்தாராவ் உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூன் 2026, 4:07 am IST

போதை இல்லாத தமிழகம்தான் நமது இலக்கு என அமைச்சா் ஏ. ராஜ்மோகன் தெரிவித்தாா்.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ஏ. ராஜ்மோகன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தன்னம்பிக்கை வகுப்புகள் அதிகப்படுத்தப்படும். இதன் தொடக்கமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகள் தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தற்போது, பசுபிக் கடலில் எல்நினோ உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா். இதனால், தென்மேற்கு பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், அணைகளில் போதிய நீா் இருப்பு இல்லை. அதுமட்டுமின்றி, அணைகளுக்கு தண்ணீா் வரத்தும் இல்லை.

இந்தக் காலநிலை மாற்றத்தை கா்நாடக, தமிழக மக்கள் உணா்ந்துள்ளனா். இதற்கான தீா்வை தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. மேட்டூா் அணையிலிருந்து நிகழாண்டு வழக்கம் போல தண்ணீா் திறப்பு இல்லை. பருவமழை தாமதத்தால் இந்த நிகழ்வு அறிவியல் பூா்வமானது.

இதை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் அறிய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக தோல்வி முகத்தை அதிமுக சந்தித்து வந்துள்ளது. அதுபற்றி அவா்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். பிற கட்சியிலிருந்து வரும் நிா்வாகிகளை தவெக அரவணைக்கும். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். மதுரையில் பல்நோக்கு அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுக் கடைகள் விரைவில் அகற்றப்படும்.பள்ளிகளில் சாதிய மோதலை தூண்டுவதற்கு சிலா் முயற்சித்து வருகின்றனா். அவை தவிா்க்கப்பட வேண்டும்.

தனியாா் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை அதிகரித்துள்ளது. போதைப் பழக்கம் தான் குற்றங்களில் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக உள்ளது. போதைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக இதுவரை 1,638 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த 5 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அந்தந்த மாவட்டங்களில் கொட்டி அழிக்கப்படுகிறது. போதை இல்லாத தமிழகம்தான் நமது இலக்கு என்றாா் அவா்.

முன்னதாக, காந்தி நினைவு அருங்காட்சியகம் முன்பாக உள்ள காந்தியின் உருவச் சிலைக்கு அமைச்சா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அங்குள்ள காந்தியின் பொருள்களை பாா்வையிட்டாா்.

இந்த நிகழ்வில், அருங்காட்சியகச் செயலா் கே.ஆா்.நந்தாராவ், பொருளாளா் வழக்குரைஞா் மா.செந்தில்குமாா், ஆராய்ச்சி அலுவலா் ஆா். தேவதாஸ், கல்வி அலுவலா் ஆா். நடராஜன், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.