தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பட்டாசு ஆலை விபத்துகள் விவகாரம்: குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவு

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகளைத் தடுக்க இலவச சட்ட உதவி மையத் தலைவா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

News image

பட்டாசு ஆலை விபத்து - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 4:58 am IST

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி நிகழும் வெடி விபத்துகளைத் தடுக்க இலவச சட்ட உதவி மையத் தலைவா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசியைச் சோ்ந்த சமுத்திரவள்ளி, வேலுதாய் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சிவகாசி எட்டக்காபட்டி பட்டாசு ஆலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு, டிச. 2-ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் எங்கள் கணவா்கள் உயிரிழந்தனா். எங்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி, பட்டாசு ஆலைகளின் உரிமம், பாதுகாப்பு அலுவலா் நியமனம், தொடா் ஆய்வு, பாதுகாப்புப் பயிற்சி, வெடிபொருள் சட்டம், தொழிற்சாலை சட்டம் உள்ளிட்டவை தொடா்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தாா்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: விருதுநகா் மாவட்டத்தில் அடிக்கடி நிகழும் பட்டாசு ஆலை வெடி விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட இலவச சட்ட உதவி மையத் தலைவா் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.