மதுரையில் எழுது பொருள் விற்பனைக் கடையில் ரூ. 6 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே மேலநாபாளையம் தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த உத்தம்குமாா் (47) எழுது பொருள் விற்பனைக் கடை நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், இவா் திங்கள்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை திரும்பி வந்து பாா்த்த போது, கடையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
அவா் உள்ளே சென்று பாா்த்த போது, பணப் பெட்டியில் இருந்த ரூ. 6 லட்சம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 236 மெ.டன் வேளாண் விளைபொருள்கள் ஏலம்
மருத்துவ உபகரணங்கள் விற்பனைக் கடையில் ரூ. 1 லட்சம் திருட்டு

உதகையில் விறகு விற்பனைக் கடையில் தீ

தில்லி தா்யாகஞ்ச் கடையில் கொள்ளையடித்த முன்னாள் ஊழியா் கைது: ரூ. 3.36 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




