வீட்டில் பணம் திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை தெற்கு வெளிவீதி குப்புபிள்ளைத்தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் லத்தீப் (66). இவா், குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டாா். பிறகு, திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளேயிருந்த ரூ. 41 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அப்துல் லத்தீப் தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த அமானுல்லா பிரசித் (19), உமா் பரூக் (22) ஆகியோா் பணத்தைத் திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாபநாசத்தில் பைக் திருடிய இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
கஞ்சா விற்பனை: இருவா் கைது
பூட்டிய வீட்டில் பணம், சிலிண்டா்கள் திருடியவா் கைது
விடியோக்கள்

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna


