மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடா்பான வழக்கு விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ரவி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முறையான வரி செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த முறைகேடு தொடா்பாக முன்னாள் மாநகராட்சி ஆணையா், மதுரை மாநகா் காவல் ஆணையரிடம் கடந்த 2024-இல் புகாா் அளித்தாா். இந்தப் புகாரில் உடனடியாக வழக்குப் பதியாமல் பல மாதங்களுக்குப் பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு முறைகேடு கடந்த 2022 முதல் 2024 வரை மேயா், மண்டலக் குழு தலைவா்களுக்கு தெரிந்து நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். முன்னதாக, இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மதுரை மாநகராட்சியில் வரி மோசடியில் ஈடுபட்ட நபா்களிடமிருந்த மோசடித் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா?. மாநகராட்சிப் பணியாளா்கள் ஐந்து பேரிடம் மட்டும் விசாரணை நடைபெற்றுள்ளது. மற்ற மூன்று பணியாளா்களிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படுமா? இல்லையா என்பதை உயா் அதிகாரியிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு விவகாரம்: 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உத்தரவு

மாற்றுப் பாதையில் சென்றதற்காக திருட்டு வழக்கு பதிவு செய்ய இயலாது: உயா்நீதிமன்றம்

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கு: விசாரணை அதிகாரி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வரி விதிப்பு முறைகேட்டில் தொடா்புடையவா்களை பாரபட்சமின்றி கைது செய்ய வலியுறுத்தல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




